விவசாயத்துக்கே முன்னுரிமை- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு!

தன்னுடையதும் அரசாங்கத்தினதும் பிராதான கொள்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிப்பதே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கெப்பிட்டிகொல்லாவ -கணுகஹவெவ கிராமத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விவசாயத்தை தமது ஜீவனோபாயமாகக் கொண்ட மக்களின் நாளாந்த பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், அரச அதிகாரிகளின் முழுமையான ஆதரவு குறித்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, 2012ஆம் ஆண்டின் கூகுள் வரைபடத்தின் படி வனப்பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை உடனடியாக, விவசாய நடவடிக்கைகளுக்காக பொதுமக்களுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Comments are closed.