வீடுகளில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத மருந்து
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வெலிகம பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கொவிட் தொற்றுறுதியாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் வீட்டுக்கு நாளை முதல் இந்த மருந்துகளை விநியோகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 070 5551470 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இது தொடர்பில் அறிந்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது