வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் இருவரை காருடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில், கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகள் மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரால் திருடப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.