வீட்டிலும் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார்.

வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15 விநாடிகள் என்ற சிறிதளவான காலமே எடுக்கும் என்பதானால், அந்தக் காலப்பகுதிக்குள் ஒருவருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், இயன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.