வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகி

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ஷஹானா (வயது 20).  மாடல் அழகியான ஷஹானா,  ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கோழிக்கோட்டில் சேவாயூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் ஷஹானா அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது கணவர், அறையை திறந்து பார்த்த போது அங்கு ஷஹானா, ஜன்னலில் தூக்குபோட்டு பிணமாக கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஷஹானா இறந்தது பற்றி அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் ஷஹானா சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர் அவரது கணவர் சஜ்ஜாத் தொடர்ந்து பணத்துக்காக ஷஹானாவை அடித்து துன்புறுத்தியதாக கூறினர்.

ஷஹானாவின் தாயார் கூறும் போது ஷஹானா தன்னை கணவர் துன்புறுத்தி வருவதாக ஏற்கனவே கூறி இருந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை. அவர் 20வது பிறந்தநாள் விழாவிற்கு எங்கள் அனைவரையும் அழைத்து இருந்தார் என கூறினார்.

போலீசார் சஜ்ஜாத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.