வீதிகளில் உமிழ்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாட்டில் பெருந்தெருக்களில் எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறை பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷவினால் காவல்துறை சுற்றுச்சூழல் பிரிவுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வீதிகளில் வெவ்வேறு இடங்களில் எச்சில் உமிழ்வதால் சூழல் மாசுபடுவதுடன், கொவிட் அச்சுறுத்தலும் அதிகரிப்பதனை கருத்தில் கொண்டே இவ்வாறு சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம் இதுபோன்ற குற்றங்களைச் புரிபவர்களை கைது செய்து நீதிமன்றில் வழக்கு தொடர முடியும் என்றும் காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Comments are closed.