வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை
170 தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கான நேர்முக பரீட்சைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நேர்முக பரீட்சை பெறுபேறுகளை அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வெற்றிடமாக இருந்த 100 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.