வெள்ளத்தில் மிதக்கிறது திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து பெய்துவரும் அடைமழை காரணமாக நகரின் பல குடிமனைகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

குறிப்பாக திருகோணமலை நகரின் மட்கோ, பள்ளத்தோட்டம், உப்புவெளி, 3ம் கட்டை,அலஸ்தோட்டம், துவரங்காடு, கன்னியா ஆகிய பகுதிகளே நீரில் மூழ்கியுள்ளன..

திருகோணாமலை நிலாவெளி பிரதான வீதியிலும் வெள்ள நீர் சடுதியாக அதிகரித்ததால் அவ் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பல வீடுகளுக்குள் வெள்ளம் உட்புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

Comments are closed.