வேல்சை வீழ்த்தியது இந்திய அணி

9-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 12-ந் தேதி வரை நடக்க உள்ள இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 15 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ‘டி’ பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியுடன் மோத உள்ளது.

Comments are closed.