ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் 5 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வுகளின் போது, எதிர்க்கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்ட, ஸ்ரீ லங்கா ரெலிகொம் வர்த்தக நாம மாற்றத்துக்காக 2 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனும் ஆதாரமற்ற அறிக்கை முற்றிலும் பொய்யானது மற்றும் எவ்விதமான ஆதாரங்களுமற்றது என ஸ்ரீ லங்கா ரெலிகொம் முற்றாக நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது,

எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குறிப்பிடுகையில், அவ்வாறு செலவிடப்பட்ட தொகையை, சொந்த நாட்டுக்கு மீளத் திரும்ப முடியாது வெளிநாடுகளில் தவிக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வர செலவிட்டிருக்கலாம் என்றிருந்தார். ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஒரு கூட்டாண்மை நிறுவனம் என்பதுடன், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு அதன் நிதிகளை செலவிடுமாயின், கூட்டாண்மை ஆளுகைக் கொள்கைகள், நிதி மரபுச்சீர்முறைகள் மற்றும் பங்காளர் உரித்து ஆகியவற்றை மீறும் வகையிலமைந்திருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகின்றது என்பதுடன், எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயங்களை நன்கு அறிந்திருப்பார் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

தமக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பற்ற மற்றும் தரக்குறைவான கருத்துகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் கடும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.

Comments are closed.