ஹட்டனில் இரு மாணவிகள் வைத்தியசாலையில்

ஹட்டனில் உள்ள முன்னணி பெண்கள்  பாடசாலையை சேர்ந்த 02 இரண்டு மாணவிகள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, குறித்த மாணவிகள் அண்மையில் சென்று வந்ததாக தெரிவிக்கப்படும், ஹட்டன் பகுதியை சேர்ந்த பெண்கள் விடுதியில் 20 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.