ஹட்டனில் கொரோனா ஆடுகிறது

ஹட்டனில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று (24) உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (23) இந்த ஆசிரியர் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில், நேற்றிரவு ஏற்பட்டிருந்த திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்டப் பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான ஆசிரியர் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமைக் கண்டறியப்பட்டுள்ளதால், அப்பாடசாலையின் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.