ஹட்டன் நகரிலுள்ள இரு பிரபல பாடசாலைகளுக்குப் பூட்டு

ஹட்டன் நகரிலுள்ள இரு பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து இரு பாடசாலைகளும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதுடன், ஹட்டன் வலய கல்விப் பணிமனையும் மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம்  தரம் 9 இல் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவர், சுகவீனம் காரணமாக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

தொற்றுக்குள்ளான மாணவனோடு தொடர்பைப் பேணி வந்த ஆசிரியர்கள் 14 பேர் உள்ளடங்களாக 34 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை நேற்று  (26) வெளியானபோதே, 13 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

13 பேரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.