ஹற்றனிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவர் ஒருவருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஹற்றனிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் பாடசாலை நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொவிட்-19 தொற்றிருப்பது உறுதியானது.

இதேவேளை வகுப்பிலுள்ள 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலை வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மாணவரின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

Comments are closed.