ஹற்றன் − கொழும்பு பிரதான வீதியில் தாழிறக்கம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டிருந்த நிலையிலே நேற்று முன்தினம் மாலை பெய்த கடும் மழையில் பாரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது இப் பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தாழிறங்கியுள்ள வீதிப்பகுதி விரைவில் புனரைமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.