ஹெராயின் கடத்தி வந்த ஆப்பிரிக்க பெண் கைது

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்து சேர்ந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பையை சோதனையிட்டபோது, உள்ளே ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அது 2 கிலோ எடைக்கு மேல் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.15 கோடி ஆகும். போதைப்பொருளின் ஒரு பகுதி, ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments are closed.