ஹெரோயினுடன் இருவர் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (07) கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 15 கிலோகிராம் 480 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிலோ 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இன்று (07) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Comments are closed.