ஹெரோயினுடன் இருவர் கைது

பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தில் 70 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இருவரிடமிருந்தும் 7 கிலோகிராமுக்கும்  அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 25 மற்றும் 30 வயதுகளையுடைய இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.