ஹெரோயினுடன் ஒருவர் கைது
கொழும்பு, முகத்துவாரம் – மெத்சந்தசெவன பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 519 கிராமுக்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர், முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.