ஹேமமாலினிக்கு இந்திய திரைப்பட ஆளுமை விருது

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது பெறுபவர்களின் பெயர்களை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் நேற்று அறிவித்தார்.

பிரபல நடிகையும், தற்போது உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியின் எம்.பி.யுமான ஹேமமாலினி மற்றும் சிறந்த பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகிய 2 பேருக்கும் இந்த விருதை மத்திய மந்திரி அறிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் குறிப்பிடும்போது, “இந்திய திரைப்படத் துறையில் ஹேமமாலினி, பிரசூன் ஜோஷி ஆகியோரின் பங்களிப்பு பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது. பல தலைமுறைகளின் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இவர்களுக்கு கோவாவில் நடைபெறும் 52-வது சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.