ஹொரண – கம்பளை பகுதிகளில் வாகன விபத்து

புளத்சிங்கள காவல்துறை பிரிவிற்குட்பட்ட மத்துகம ஹொரண வீதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் பலத்த காயமடைந்தவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் புளத்சிங்கள, திப்போட்டாவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை கம்பளை பிரதேசத்திலும் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் கம்பளை, டோலுவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பியகம பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 42 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.