12 வயதான சிறுமியை அடித்து, காயப்படுத்தி, துன்புறுதி படுகொலை செய்த பெண்கள் மூவர் உட்பட ஆறுபேர்!

பெண்கள் மூவர் உட்பட ஆறுபேர் இணைந்து 12 வயதான சிறுமியை அடித்து, காயப்படுத்தி, துன்புறுதி படுகொலைச் செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த சம்பவம் களவாஞ்சிகுடி பெரியகல்லாறு பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் அச்சிறுமியை அவ்வப்​போது அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனால், உடம்பின் பல இடங்களில் சிறுமிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த காயங்களின் ஊடாக கிருமித்தொற்றி, உடலுக்குள் புகுந்துவிட்டது. அத​னாலேயே இச்சிறுமி மரணித்துள்ளார் என  மரண பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Comments are closed.