12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்த வேண்டுமென ரணில் கோரிக்கை

12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொவிட் பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் சுகாதார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படாமல் இராணுவத்தினரின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படுவதும் அதிருப்தியளிப்பதாக முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.