13 – 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு இல்லை

சித்திரை புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அத்துடன், நீர் மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நேற்று ஓரளவு மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக இந்த வாரத்தை விட எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு காலம் மேலும் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.