1,500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில்


அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அரிசி, சீனி, பருப்பு, கடலை, வெள்ளைப்பூடு உள்ளிட்ட மேலும் பல அத்தியாவசிய பொருட்கள் குறித்த கொள்கலன்களில் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதனை விடுவிப்பதற்குத் தேவையான டொலரை வழங்குமாறு மத்திய வங்கியிடம் தற்போது கோரியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Comments are closed.