18 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்
நோர்வூட் – ஸ்டொக்ஹம் தோட்டம் தொழிற்சாலைப் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 18 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (13) முற்பகல் முதலாம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, 17 பெண் தொழிலாளர்களும், ஆண் தொழிலாளி ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்களில் ஐவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
ஏனையோர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.