18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்கும் திட்டம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்கும் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்துக்கான முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலன் கருதி, அனைத்து இளைஞர்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைமைத்துவப் பண்பு உள்ளிட்ட திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் குறித்த இராணுவப் பயிற்சியை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Comments are closed.