20 வயதில் விமானியான இளைஞன்!
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், வணிக விமானத்தைச் செலுத்துவதற்கான விமானி அனுமதி பத்திரத்தை பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மந்தாக்வி உயர் பாடசாலையில்; இருந்து தனது 12 ஆம் வகுப்பு பரீட்சைக்கு தோற்றிய பின்னர், ஃபர்ஹான் மஜீத், உத்தராகண்டில் உள்ள விமான பயிற்சி பாடசாலையான குளோபல் கனெக்ட் ஏவியேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டில் அவர் தனது விமான பயிற்சிகளை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வணிக விமானியாக எனது அனுமதியை பெற்றுக்கொண்டேன் என ஃபர்ஹான் கூறியுள்ளார்.
அத்துடன் இந்திய விமானப்படையின் ஒரு விமான தளம் உள்ளதாகவும், அங்குள்ள ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏனைய விமானங்கள் பறக்கும் போது, அதன் சத்தம் நாள் முழுவதும் கேட்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சத்தத்தை கேட்ட நிலையிலேயே, விமானியாக வேண்டும் என்ற ஆசை தனக்கு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு காஷ்மீரில் இந்திய வணிக விமானிக்கான அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் இளைய விமானி என்பதில் தான் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது தந்தை அப்துல் மஜீத் கூறுகையில்,
தனது மகனைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகவும் நாங்கள் ஒருபோதும் பின்வாங்கவில்லை, எங்கள் பள்ளத்தாக்கின் இளைய விமானியாக எனது மகன் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார். அவர் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார் எனவும் அவரது தந்தை அப்துல் மஜித் கூறினார்.