23 வயதான இளம் பெண்ணை கடத்திக் கொண்டு தப்பி ஓடிய டிப்பா் வாகனம் விபத்து, 17 வயது இளைஞன் பலி

கிளிநொச்சியில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி – கரவெட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனரக வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்படுவதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அந்த பிரதேச இளைஞர்கள் அந்த வாகனத்தை உந்துருளிகளில் துரத்திச் சென்றனர்.

இதன்போது குறித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வட்டக்கச்சி – புதுப்பாலம் பகுதியில் விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் கிளிநொச்சி – நாகேந்திரபுரம் பகுதியைச சேர்ந்த 17 வயதான இளைஞர் பலியானார்.

சம்பவத்தில் காயமடைந்த 23 வயதான பெண் மற்றும் மேலும் ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.