24 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

மராட்டிய மாநிலத்தில் சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை குற்றப்பிரிவு போலீசார் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் சாலை வழியாக ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 24 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 1.44 கோடி ரூபாய் என்பது தெரியவந்துள்ளது.

போதைப்பொருளை கடத்தி வந்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.