26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஏழரை மணிநேர மின்வெட்டு

26 ஆண்டுகளுக்கு பின்னர், இன்றைய தினம், ஏழரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 5 மணிநேரம் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

மின்சார உற்பத்திக்கு அவசியமான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளாவிட்டால், மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் எதிராக வழக்குத் தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.