28 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தை 28 மணித்தியாலங்களுக்கு இடை நிறுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாளை (13) இரவு 8 மணி முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை இவ்வாறு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு 04,05,06,07 மற்றும் 08 ஆகிய பகுதிகளிலும், கோட்டே மற்றும் கடுவலை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.