35 கிலோ கிராம் மரமஞ்சளுடன் நபரொருவர் கைது…!

இமதுவ, கணங்கே பிரதேசத்தில் வீடொன்றில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ கிராம் மரமஞ்சள், 6 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி மற்றும் துப்பாக்கி ஒன்றுடன் நேற்று   நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கல விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிாிவினருக்குக் கிடைத்த தகவல்களையடுத்து கொக்மாதுவ விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இதன்போது கண்டுபிடிக்கப்பட்ட மரமஞ்சள் தொகையானது கணங்கே-கொடிகல மலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டுள்ளதாக தொிய வந்துள்ளது.

மேற்படி சந்தேக நபர் இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

Comments are closed.