360 கிலோ கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்பு..!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 360 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன் துறை காவல் துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி 5 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதை பொருள் மீட்பு தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments are closed.