சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயணிகள் போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் ரத்து!

சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றத் தவறிய 50 பேருந்துகளின் பயணிகள் போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றாத பேருந்துகள் தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.