69 வயது முதியவரை அடித்துக்கொன்ற தந்தை

மராட்டிய மாநிலம் மும்பையில் சப்அர்பன் முல்தண்ட் பகுதியை சேர்ந்தவர் சலீம் ஜாபர் அக்தர் ஆலம் (38). இவருக்கு ஒரு மகள் உள்ளார். சலீமின் வீட்டில் 69 வயதான அப்துல் கலில் ஷேக் என்ற முதியவர் சமையல்காரராக வேலை செய்துவந்தார்.
இதற்கிடையில்,  அப்துல் சமையல் வேலை செய்து வரும்போது தனது முதலாளியான சலீமின் மகளை அடிக்கடி கிண்டல் செய்துள்ளார். தனது மகளை சமையல்காரர் அப்துல் அடிக்கடி கிண்டல் அடிப்பது சலீமிற்கு தெரியவந்தது.
இந்நிலையில், சமையல் வேலை செய்துகொண்டிருந்தபோது அப்துல் வழக்கம்போல நேற்றும் மீண்டும் அந்த சிறுமியை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சலீம் சமையல்காரர் அப்துலை பயங்கர ஆயுதங்களை கொண்டு அடித்துள்ளார். இதில், சலீம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, சலீமின் உடலை வீட்டிற்கு அருகே உள்ள ஒரு மின்கம்பம் அருகே தூக்கிவீசியுள்ளார். சாலையோரம் ஒருநபர் ரத்தகாயங்களுடன் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தது சலீமின் வீட்டில் சமையல் வேலை செய்யும் அப்துல் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகளை அப்துல் அடிக்கடி கிண்டல் செய்ததால் அவரை அடித்து கொன்றதாக குற்றத்தை அப்துல் ஒப்புக்கொண்டார்.

Comments are closed.