7 வயது சிறுவன் சுத்தியால் அடித்து கொலை

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையில் சுத்தியால் அடித்து 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபியா என்பவருக்கும் அவரது சகோதரியின் கணவர் ஷாஜகான் என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து உள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அதிகாலையில் ஷாஜகான் சபியா வீட்டிற்குள் நுழைந்து அவரது 7 வயது மகன் அல்தாப் ரியாஸை சுத்தியலால் தலையில் அடித்து உள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சபியா மற்றும் அவரது தாயாரையும் ஷாஜகான் தாக்கியுள்ளார்.

அப்போது, சபியாவின் 15 வயது மகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் ஷாஜகான் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். சபியா மற்றும் அவரது தாயார் கோட்டையம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments are closed.