புலமைப்பரிசில்

இலங்கையின் கல்வி வரலாற்றில் இலவசக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படுபவர் கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ கன்னங்கரா அவர்கள். அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவசக் கல்வித் தொடரில் வருமானம் குறைந்த, திறமைமிக்க மாணவர்களின் எதிர்காலக் கல்வி வாழ்க்கையை ஊக்கப்படுத்தவே 1952ஆம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிற்படட காலப்பகுதியில் பரீட்சையில் சித்தி அடையும் மாணவர்களுக்கு நிதித் தொகை வழங்கப்படுகிறது.

பரீட்சை என்பது ஒரு மாணவனின் அறிவுமட்டத்தை, ஞாபத் திறனைப் பரீட்சிப்பதாகும். மாணவரிடையே தனியாள் வேறுபாட்டுப் பண்புகள் ஒரே விதமாக அமைவதில்லை. இதனால் அவர்களின் பரீட்சை பெறுபேறுகளும் வேறுபட்டதாகக் காணப்படும். ஏற்றுகொள்ளத்தக்கதல்ல. அது பாதிப்புக்களையே தோற்றுவிக்கும்.
வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கும், திறமையான மாணவர்களை பிரபல்ய பாடசாலைகளில் அனுமதிப்பதற்குமாக அறிமுகப்படுத்தப்பட்ட இப்பரீட்சையில், தகைமை பெறும் மாணவர்கள் வசதி குறைந்திருப்பின் , உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு 5,000 ரூபா வரை 15,000 மாணவர்களுக்கு இப்புலமைப் பரிசில் சகாயக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அத்துடன், கல்வி அமைச்சினால் நிர்ணைக்கப்படும் பாடசாலைகளுக்குரிய வெட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ப 15 ஆயிரம் மாணவர்கள் பிரபல்ய பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் அனுமதியளிக்கப்படுகின்றனர்.

சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களில் திறமை மற்றும் தகுதிகள் உள்ள மாணவர்கள் நிதி ரீதியான கஷ்டங்கள் காரணமாக உயர் கல்வியில் இருந்து விலகிச் செல்வத்தைத் தவிர்த்து அவர்களை அதன் பொருட்டு ஈடுபட செய்தல் . ஆரம்பக் கல்வி மட்டத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின் போது மகாபொல புலமைப்பரிசில் வேலைத்திடடமும் செயற்படுத்தப்படுகின்றது .ஆரம்பக் கல்வி மட்டத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின் போது மகாபொல புலமைப்பரிசில் வேலைத்திடடமும் செயற்படுத்தப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களுக்கு 2019/2020ஆம் கல்வியாண்டிற்கு தெரிவாகும் இலங்கை மாணவர்களுக்கு சவூதி அரேபியாவை தலைமையகமாக கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளது.  இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் இளமாணி பட்டதாரிகளுக்கான புலமைப் பரிசில், கலாநிதி பட்டக் கற்கைகளுக்கான புலமைப் பரிசில், பட்டப்பின் பட்ட புலமைப் பரிசில், கலாநிதி பட்டப்பின் ஆராய்ச்சிக்கான புலமைப் பரிசில் என நான்கு வகையான புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. மருத்துவம்,பொறியியல்,விஞ்ஞான கற்கைகள், தகவல் தொழில்நுட்பம், விலங்கு மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு மாதாந்தம் இலங்கை நாணயப் பெறுமதியில் 5000ரூபா பெறுமதியான புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.