அசையும் சுவர்

அறையேதும்
இல்லாத
ஓலைக்குடிசைக்குள்
அன்பு மகள்
பெரியவளானாள்

ஆங்காங்கே
ஓட்டையுடன்
அறையொன்று
முளைத்து
ஆடி அசைகிறது
அதன் சுவர்

அசையும் சுவராய்
அம்மாவின்
பழைய சீலை

Comments are closed.