அப்துல் கலாம் பொன்மொழிகள்

நம் பிறப்பு ஒரு சிறு
சம்பவமாக இருக்கலாம்
ஆனால் நம் இறப்பு
பெரிய சரித்திரமாக
இருக்க வேண்டும்.

கனவு என்பது உங்கள்
உறக்கத்தில் வருவது
அல்ல.. உங்களை உறங்க
விடாமல் செய்வது.

சிறந்த நட்பு என்பது
நண்பனின் நிலையறிந்து
அவனுக்கு தக்க
சமயத்தில்
உதவுவது தான்.

உங்கள் குறிக்கோளில்
வெற்றிபெற வேண்டுமானால்..
உங்கள் குறிக்கோளில்
இருந்து சிறிதும் விலகாமல்
அதீத சிந்தனையுடன்
செயல்பட வேண்டும்.

நமது தவறுகளில் இருந்து
நாம் கற்றுக்கொள்ளும்
பாடமே உயர்வான
வாழ்க்கைக்கு நம்மை
அழைத்துச் செல்லும்.

சாதிக்க வேண்டும் என்ற
வேட்கை நம்
ஒவ்வொருவரினதும்
மனதிலும் இருக்க வேண்டும்
உண்டு உறங்கி காலத்தை
கழிப்பதற்காக நாம்
பிறக்கவில்லை.

உனது சிந்தனைகளையும்
கற்பனைகளையும்
நீ முதலீடாக முன் வைத்தால்
அது உனக்கு வாழ்க்கையில்
பல வெற்றிகளைத்
தேடித்தரும்.

உங்கள் செயல்கள்
உங்களுடன் மட்டும்
நின்று விடுவதில்லை..
அது உங்களது
குழந்தைகளின் பின்னே
நிழல் போல தொடரும்.

வெற்றி என்ற இடத்தில்
தோல்வியும் உண்டு
என்பதை
புரிந்துகொள்ள வேண்டும்..
எனவே தோல்வி
வந்து விட்டதே என்று
துவண்டு விடக்கூடாது.

மதம் என்பது
பக்குவப்பட்டவர்களுக்கு
பண்பு வளர்க்கும் சாதனம்..
அல்லாதவர்களுக்கு அது
சண்டை வளர்க்கும் ஆயுதம்.

நல்ல புத்தகங்களை
அறிந்து கொள்வதும்
உரிமை கொள்வதும்
வாழ்வின் இனிய வரமாகும்..
புத்தகம் தான் உங்கள்
சிறந்த நண்பன்.

தோல்வி என்பது ஒவ்வொருவர்
வாழ்விலும் வரத்தான் செய்யும்..
இன்பம் என்ற ஒன்று இருந்தால்
துன்பமும் உண்டு என்பதைப்
போலத்தான் தோல்வியும்.

நம்மால் முடியும் என்ற
எண்ணத்தில் நாம் செய்யும்
செயலில் உறுதியாக இருந்து
விடாமுயற்சியோடு
செயல்பட்டால் செய்யும்
செயலில் என்றுமே
வெற்றி கிடைக்கும்.

நாம் அனைவரிடமும்
அன்புடனும்.. பண்புடனும்..
மரியாதையுடனும் பழகினால்
பிறர் நம்மிடம் நல்ல
நாகரிகத்துடன் நடந்து
கொள்வார்கள்.

நமது ஆசைகளை குறைத்துக்
கொல்வதில் தான் மனஅமைதி
இருக்கிறது.. ஆசைகள்
அதிகரித்தால் மன அமைதியை
இழக்க நேரிடும்.

நமது வாழ்க்கையில்
ஆடம்பரம் அதிகரிக்க
அதிகரிக்க ஒழுக்கம்
மறையத் தொடங்கிறது..
ஆகவே ஆடம்பரம் ஆபத்து..
எளிமையான வாழ்க்கையே
உண்மையான வாழ்க்கையாகும்.

ஒரு செயலில் வெற்றி
பெறவேண்டும் என்றால்
பதற்றம் இல்லாமல்
இருப்பதுதான் வெற்றி
பெறுவதற்கான
சிறந்த வழியாகும்.

Comments are closed.