அப்பா பிறந்தநாள் கவிதை

அன்பு தந்தைக்கு எனக்காக
வாழ்ந்து என் அனைத்து
கனவுகளும் நிறைவேற
உதவி புரிவதற்கு நன்றி..
உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேறவும் என்றும்
மகிழ்வுடன் வாழ.. என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் ஆசைகளை உங்கள்
ஆசையாகவும்..
என் கனவுகளை உங்கள்
கனவுகளாகவும் கொண்ட..
எனக்காக வாழும்
என் தந்தைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
உங்கள் வாழ்வில் என்றும்
மகிழ்ச்சி பொங்க மனதாராக
வாழ்த்துகின்றேன்.

உலகில் ஈடு இணையற்ற
என் அப்பாவிற்கு உங்களின்
இந்த நாள் இனிய
பிறந்தநாளாக அமையட்டும்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அப்பா.

பிள்ளைகளின் அனைத்து
பிரச்சனைகளுக்கும் உடனே
தீர்வு காண துடிக்கும்
முதல் இதயம் அப்பா மட்டுமே..
என் அன்பு தந்தைக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பல தடவை அம்மா 
சொல்லிக் காட்டியிருப்பார்கள்..
பத்து மாதம் சுமந்த கதையை..
ஆனால் அப்பா ஒரு தடவை கூட
சொல்லிக் காட்டியதில்லை..
இரவு பகலாக கஷ்டப்பட்டு
வாழ்க்கை முழுவதையும்
தன் குடும்பத்திற்காக
வாழ்ந்த கதையை..
நடமாடும் கடவுளுக்கு
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

நான் தடுமாறி விழுந்த
இடங்களில் கூட..
தவறி கூட மகள்
விழுந்து விடக் கூடாது
என நினைப்பவர் தான்
அப்பா.. என் தந்தைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அப்பா என்ற ஆலமர
நிழலில் இருந்தவரை
வாழ்க்கை எனும் வெயில்
என்னை சுட்டதே இல்லை..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அப்பா.

தான் பார்க்காத
உலகத்தை கூட தன்
பிள்ளைகள் பார்க்க வேண்டும்
என நினைத்து உழைப்பவர்
தான் தந்தை  இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.

தான் வறுமையில்
இருந்தாலும் நம்மை
எப்போதும் ஏழையாக
வளர்க்க நினைத்ததில்லை..
என் தந்தைக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இந்த உலகத்தில் தன்
குடும்பத்திற்காக பல
தியாகங்களை செய்து
வாழ்ந்து கொண்டிருக்கும்
என் அப்பாவிற்கு.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Comments are closed.