அம்மா கவிதைகள்

அறிவு இருக்கா என்று அம்மா
தன் பிள்ளையிடம் ஒரு போதும்
கேட்க மாட்டாள். காரணம் இந்த
உலகிலே பெரிய அறிவாளி தன்
பிள்ளை தான் என்ற எண்ணம்
அவள் மனதில் இருக்கும்..!

விழிகளை சுமக்கும்
இமைகளுக்கு விழிகள்
என்றுமே சுமையானது
அல்ல..! கருவை சுமக்கும்
தாய்க்கும் குழந்தை
என்றுமே சுமையாக
இருந்தது இல்லை.

உன்னை பத்து மாதம்
தவம் இருந்து படைத்த
அம்மா சொல்லை தட்டாதே..!

எனக்கு இந்த உலகில்
முகவரி கொடுத்த
தொப்புள் கொடி உறவு..!
வாழ்வதற்கு வாடகை
கேட்காத ஒரு இடம்
என்றால் அது தாயின்
கருவறை மட்டும் தான்..!

அம்மாவின் அன்பு, அக்கறை,
அரவணைப்பு என்பன
குளத்தில் இருக்கும் தாமரை
மலர்களை போன்றது.
எப்போதும் நனைந்து
கொண்டே இருக்கும்.

இந்த உலகில் வர்ணிக்க
வார்த்தைகளும்
கவிதைகளும் இல்லாத
உறவு என்றால்
அது “அம்மா”..!

சுற்றும் பூமி கூட ஒரு
நாள் நின்று போகலாம்
ஆனால் ஒரு தாயின் தன்
பிள்ளைகள் பற்றிய
சிந்தனையும் அக்கறையும்
ஒரு போதும் நிற்காது.

உதிக்கும் சூரியனுக்கு கூட
இரவில் ஓய்வுண்டு ஆனால்
தாய்க்கு என்றுமே ஓய்வு
என்பது கிடைப்பதில்லை..!

அம்மா என்பவள் உயிருக்குள்
இன்னொரு உயிர் சுமக்கும்
பொக்கிஷம், உதிரத்தை
பாலாக்கும் அற்புதம்,
இறைவனுக்கும் மேலான சக்தி..!

ஆயிரம் வலிகளும்
துன்பங்களும்
அடுக்கடுக்காக வந்தாலும்..
அம்மாவின் ஆறுதலான
ஒரு வார்த்தை போதும்
அனைத்தையும் மறந்து
புத்துணர்ச்சியுடன்
செயல்படலாம்.

நிழல் கூட வெளிச்சம்
இல்லாத போது நின்று
விடும். ஆனால் தாயின்
அன்பு நம் உயிர் பிரியும்
வரை கவசமாக
நின்று காக்கும்..!

அவள் அழுது நம்மை
பெற்றதாலோ என்னவோ
அம்மா ஒரு போதும் நம்மை
அழ வைப்பது இல்லை.

தன் பசி மறந்து
பிள்ளைகளுக்கு உணவூட்டும்
தாய் பிள்ளைகளின் சிரிப்பை
பார்த்து தன் பசியை
போக்குவாள்..!

எத்தனை சோகங்கள் என்
மனதை வதைத்தாலும் என்
அன்னை மடியில் சிறிது
நேரம் தலை வைத்து
உறங்கினால் அத்தனை
சோகங்களும் இருந்த
இடம் தெரியாமல்
ஓடி விடும்.

உன் வாழ்வின் இருட்டை
போக்கி வெளிச்சத்தை
தர போராடும் உன் தாயின்
அன்பை ஒரு போதும்
மறந்து விடாதே… தாயின்
முகத்தில் சிரிப்பு வர செய்
உன் வாழ்வு எப்போதும்
உயர்வாக இருக்கும்..!

Comments are closed.