அம்மா பற்றிய பொன்மொழிகள்
கோடி உறவு அருகில் இருந்தாலும் அம்மாவை மிஞ்சிட உலகில் உறவேதும் இல்லை.
கோவிலுக்குள் இருக்கும் சிலையை விட.. உயர்ந்த தெய்வம் அம்மா தான்.
பத்து நிமிடம் கூட தாங்க முடியா வயிற்று வலியை.. ஆனால் பத்து மாதம் சுமந்து.. தன் உயிரை துச்சமாக எண்ணி என்னை படைத்த கடவுள்.. அம்மா.!
தன் பிள்ளை தூங்க தொட்டில் ஒன்று செய்து.. இரவு பகலா தாலாட்டு பாடி தூங்க வைப்பவள் அம்மா.!
தங்கத்தில் கட்டில் இருந்தாலும் அம்மாவின் மடியில் உறங்குவது போல் வராது.!
ரத்தத்தை பாலாக்கி ஊனை உயிராக்கி தனக்கு பசித்தாலும் தன் குழந்தை பசியை தாங்க முடியாதவள் அம்மா.!
கருவரையில் சீராட்டி நிலவொளியில் சோறூட்டி சூரிய ஒளி சுட்டெரிக்க விடாமல் பேணி வளர்ப்பவள் தாய்.!
வெயிலில் நிழலாக பனிக்கு போர்வையாக மழைக்கு குடையாக இருப்பவள் அம்மா.!
இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் சுவாசமாக இருப்பவள் தாய்.!
அம்மா என்று உச்சரிக்கையில் வலி கொண்ட மனம் கூட வலி மறந்து சிரிக்கும்.!
பிறப்பவன் இங்கே மகிழ்ச்சியாக இருக்கையில் சுமப்பவள் அங்கே வலி கொண்டு அழுகிறாள்.
மகன்களின் இதயக்கூட்டின் உண்மையான ராணி அம்மா.!
அழுவதற்கு கண்கள்.. அணைப்பதற்கு கைகள்.. சாய்ந்து கொள்ள தாயின் மடி போதும்.!
அம்மா என்ற சொல்லிற்கு நிகரானது அன்பு என்ற சொல்.. அன்பு கொண்டு எதை வேண்டுமானாலும் உன்வசம் ஆக்கிக் கொள்ளலாம்.
நம்மிடம் எவ்வளவு செல்வம், வசதிகள் இருந்தாலும்.. அம்மா தான் உலகில் மிகப் பெரிய செல்வம்.
இறந்தாலும் பிள்ளைகளை நினைக்கும் இதயம், அம்மாவின் இதயம் மட்டுமே.!
அம்மா மட்டுமே நாம் கண்ணால் பார்க்கும் ஒரே தெய்வம்.
தாயின் கருவறையை பார்த்த பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.. இருள் நிறைந்திருப்பது நரகம் மட்டுமல்ல.. சொர்க்கமும் தான் என்று.
உன்னை எத்தனை உறவுகள் மதிக்காமல் அவமதித்தாலும், உன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உன் கண்ணீரை துடைப்பவள் தான் அம்மா.!
என்னதான் பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்.. தாய்மடியில் உறங்கும் போது உணரும் பாதுகாப்பிற்கு எதுவும் ஈடாகாது.!
உலகமே தெரியாத என் அம்மாவிற்கு நான் மட்டும் தான் உலகம்.
தாயின் கருவறையில் கிடைத்த பாதுகாப்பு ஒரு உயிருக்கு உலகில் எந்த இடத்திலும் கிடைக்காது.
நீ உலகில் சுடர்விட்டு ஒளி வீச.. தன்னை திரியாக உருக்கிக் கொள்பவள் தான் தாய்.
புரண்டு படுத்தால் நாம் இறந்து விடுவோமோ? என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன் அம்மா.