அழகு

நன்மை செய்வது அழகு _ தீமை
செய்யாதிருப்பது அதைவிட அழகு.
விட்டு கொடுப்பது அழகு _ கொள்கையை
விடாதிருப்பது அதைவிட அழகு.
பொறுமை காப்பது அழகு _ தீமை கண்டு
வெகுண்டெழுவது அதைவிட அழகு.
கடமையை செய்வது அழகு _ கட்டுபாடுடன்
கூடிய கடமையுணர்வு அதைவிட அழகு.
நாம் நாமாய் இருப்பது அழகு _ நமக்குள்ளே
இருக்கும் நண்பன் அதைவிட அழகு.
இயற்கையை இரசித்தல் அழகு _ ரசனையுடன்
பாதுகாக்கும் இயற்கை அதைவிட அழகு.
கற்றல் வாழ்க்கைக்கு அழகு _ கற்றகல்வி வழி
வாழ்க்கை நடாத்துதல் அதைவிட அழகு.
வறியோற்க்கு ஈதல் அழகு _ அதை விளம்பரம்
செய்து விற்காதிருத்தல் அதைவிட அழகு.
அழகுக்கு அழகு சேர்த்தல் அழகு _ அதைஅகத்தில்
சேர்ப்பது எல்லாவற்றையும் விட அழகு.

Comments are closed.