ஆன்மீக சிந்தனைகள்
1. முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம்.
2. எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை.
3. மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.
4. பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது. பொறுமையுள்ளவனுக்கு என்றுமே அழிவு உண்டாகாது.
5. அக்கறை உள்ளவனுக்கு அனைத்தும் எளிதாக கிடைக்கும்.
6. நம்பிக்கை ஆழமானால் கடலையும் தாண்டலாம்.
7. என் பணம், என் படிப்பு என்று சிறிதும் எண்ணாதே. நான் மக்களின் சேவகன், நான் பக்தன் என்று எண்ணிக் கொள்.
8. கண்களே உள்ளத்தின் வாசல். அதன் மூலம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
9. அவித்த நெல் முளைப்பதில்லை. பக்குவம் பெற்றவனுக்கு மறுபிறவி உண்டாவதில்லை.
10. விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.
12. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்?
13. நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக இரு. நான் என்று கூறிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே.
14. உலகம் மெய் என்ற அபிப்ராயத்தை விட்டொழிக்காவிட்டால் மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.
15. மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பதுதானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.
16. பிறருக்கு நன்மை செய்வதில் ஒருவர் ஈடுபட்டாலே போதும். அவர்களின் இதயத்தில் நன்மை வளரும். நன்மை, அன்பு, கடவுள் ஆகிய எல்லாம் ஒன்றே.
17. கடல் பொங்கினால் அற்ப ஜந்து தலையெடுக்க முடியாது. அதுபோல ஞான வெள்ளம் பொங்கினால் அற்பமான அகந்தை தோன்றாது.
18. நிராசையே ஞானம், நிராசை வேறு ஞானம் வேறன்று.
19. ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.
20. மரணத்திற்கு பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.