ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

நிறைய படித்து..
மூளையை குறைவாக
பயன்படுத்துபவன்..
சிந்தனை எனும் சோம்பலில்
விழுகிறான்..!

மனித உறவுகளை
தொழில்நுட்பம் மிஞ்சும் போது
இந்த உலகம் முட்டாள்களால்
நிறைந்திருக்கும்.

அறிவை விட கற்பனை
முக்கியமானது. அது நம்மை
உறுதியாக நம்ப வைத்து
இருபது மடங்கு ஆற்றலுடன்
இலட்சியத்தை அடையச்
செயல் வீரராக உருவாக்கிவிடும்
சக்தி படைத்தது.

இந்த உலகம் அபாயகரமான
இடம். தீங்கு, தீமை
செய்பவர்களால் அல்ல. ஆனால்
இவர்களைப் பார்த்து கொண்டு
ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களே
அவர்களால் தான்.

நீங்கள் வெற்றியாளராக மாற
முயற்சி செய்யாதீர்கள்.
மதிப்பு மிக்கவராக மாற
முயற்சி செய்யுங்கள்.

தேடலும் உண்மையை
கண்டுபிடிக்க வேண்டும் என்ற
விடாமுயற்சியும் தெளிந்த
அறிவும் உங்களை
உயர்ந்தோனாக்கி காட்டும்.

அமைதியை அடக்குமுறையால்
ஏற்படுத்தி விட முடியாது.
அமைதி என்பது ஆழமான
புரிதலால் ஏற்படுவது.

பாடசாலையில் தான் கற்ற
அனைத்தையும் மறந்துவிட்ட
பின்பும் ஒருவனிடம் நினைவில்
இருப்பது எதுவோ. அதுவே
அவன் உண்மையில்
கற்ற கல்வி.

துன்பங்களுக்கு இடையில் தான்
வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.

ஒரு செயலை செய்யும் போது
உண்டாகும் தடை, அடுத்த
முயற்சிக்கான ஆரம்பம்.

சிறு செயல்களிலும் உண்மையைத்
தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்
பெரிய விடயங்களில்
நம்ப தகுதியில்லாதவர்.

அறிவை ஆனந்தமாக போதிக்க
கற்றவனே அற்புதமான
ஆசிரியன்.

படித்தவர்கள் அதிகரித்து விட்ட
இந்த காலத்தில் நல்லவர்கள்
தேவைப்படுகிறார்கள்
நல்ல தன்மையில்லாத
அறிவாளியினால் தொல்லைகளே
விளையும்.

மற்றவர்களுக்காக வாழும்
வாழ்க்கையே ஒரு பயனுள்ள
வாழ்க்கையாகின்றது.

இயற்கையை ஆழ்ந்து நோக்குங்கள்.
பிறகு எல்லாவற்றையும் நீங்கள்
சிறப்பாக புரிந்து கொள்வீர்கள்.

வெற்றியை விட முக்கியமானது
நல்ல பண்பு. வெற்றி மீது
உள்ள தாகத்தால் அதை
இழந்துவிட அனுமதிக்க
கூடாது.

சிறந்த பல சிந்தனைகள்
தோன்றத் துணை புரிவது
தனிமை தான். தனிமையான
சூழ்நிலையில் தரமான
எண்ணங்கள் தோன்றக் கூடும்.
இனிய எண்ணங்களில்
விளைவாக நல்ல
பல செயல்கள் மலரும்.

ஒரு விஷயம் ஆழமாக
பார்க்கப்படுவதால் மட்டுமே
அதனைப் பற்றிய முழுமையான
புரிதல் உண்டாகிறது.

ஒருவன் நன்றாக முன்னால்
தாண்டிக் குதிக்க வேண்டும்
என்றால். அதற்காக பின்னாலும்
போகத்தான் வேண்டும்.

அனைத்து மதங்களும்
கலையும் அறிவியலும்
ஒரே மரத்தின் கிளைகள்.

மனிதனின் சிறந்த
கண்டுபிடிப்பு
புத்தகம் தான்.

மனிதனாக பிறந்தவன்
கட்டாயம் சிந்திக்க வேண்டும்.
சிந்திக்க சிந்திக்க மனிதனின்
எண்ணங்கள் உருப்பெற்று
சிறப்படையும். சிந்திப்பது
மனிதனுடைய தனி உரிமை
சிந்திக்க தெரிந்த மனிதனே
அறிவாளி.

அறிவியலோடு கலக்காத மதம்
குருட்டுத்தன்மை உடையது.

புத்தி கூர்மையின் உண்மையான
அறிகுறி அறிவு சம்பந்தப்பட்டது
அல்ல. அது
கற்பனைத் திறனுடன்
தொடர்புடையது.

ஒரு பிரச்சனை எந்த வழியில்
ஏற்பட்டதோ அதே வழியில்
அதற்கான தீர்வைப்பற்றி
யோசிக்கும் போது நம்மால்
அதை தீர்க்க முடியாது.

Comments are closed.