இலங்கை பற்றிய பொது அறிவு

1.  இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன? 9 மாகாணங்கள் அவையாவன:
►  வடக்கு மாகாணம்
► கிழக்கு மாகாணம்
►  வடமத்திய மாகாணம்
►  வடமேல் மாகாணம்
►  மத்திய மாகாணம்
►  சபரகமுவை மாகாணம்
►  ஊவா மாகாணம்
►  தென் மாகாணம்
►  மேல் மாகாணம்

2. இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன? – 25 மாவட்டங்கள். அவையாவன:
1)  கொழும்பு
2)  கம்பகா
3)  கழுத்துறை
4)  கண்டி
5)  மாத்தளை
6)  நுவரெலியா
7)  காலி
8)  மாத்தறை
9)  அம்பாந்தோட்டை
10)  யாழ்ப்பாணம்
11)  மன்னார்
12)  வவுனியா
13)  முல்லைத்தீவு
14)  கிளிநொச்சி
15)  மட்டக்களப்பு
16)  அம்பாறை
17)  திருகோணமலை
18)  குருநாகல்
19)  புத்தளம்
20)  அனுராதபுரம்
21)  பொலன்னறுவ
22)  பதுளை
23)  மொனராகலை
24)  இரத்தினபுரி
25)  கேகாலை

3.  இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன? – 22

4.  இலங்கையின் தலைப்பட்டினம் எது?  ஸ்ரீ ஜயவர்தனபுர

5.  இலங்கையின் பெரிய நகரம் எது? – கொழும்பு

6.  இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி யார்? மேன்மை தங்கிய Gotabaya Rajapaksa

8.  இலங்கையின் பரப்பளவு என்ன? 65,610 கிமீ²  / 25,332 சதுரமைல்பூமியின் பரப்பளவு : 196,936,481 – சதுர மைல் பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 – சதுர மைல் பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 – சதுர மைல் இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 – சதுர மைல்

9. இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது?. – 04.02.1948ல்

10. இலங்கை அரசை எவ்வாறு அழைக்கப்படுகின்றது? – இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka)

11. இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது? – பம்பரகந்த.

12. இலங்கையில் நீளமான ஆறு எது? – மகாவலி கங்கை 335 கி. மீ

13. இலங்கையின் உயர்ந்த மலை எது? – பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)

14. மக்கள் தொகை என்ன? 2009 மதிப்பீடு 20,238,000 –  July 2008 குடிமதிப்பு 21,324,791

15. இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன?: இலங்கை ரூபாய் (LKR)

16. இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)

17. இலங்கையின் இணையக் குறி என்ன?: lk

18. இலங்கையின் தொலைபேசி எண் என்ன?: +94

19. இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது?: 230V

20. இலங்கை எங்கே அமைந்துள்ளது?: இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ – 6° 9’N),  நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ – 79°9’E வும் அமைந்துள்ளது

Comments are closed.