உடன் பிறவா உடன் பிறப்பே

உரிமையாய் உறவாடும்-என்
உயிரின் உருவம் நீ
என் உடன் பிறவா- உன்னத உறவும் நீ
கள்ளம் இல்லா உள்ளம் தனில்
கற்கண்டாய் நான் கரைந்தேன்
அன்பு என்றால் என்னவென்று- என்
அண்ணனைக்கொண்டே நான் அறிந்தேன்!
தவறே ஏதும் நான் செய்தாலும்
தண்டனைகள் ஏதும் தரமாட்டான்
தரமான போதனைகளால்-என்
தவறினையும் திருத்திடுவான்
உயரம் பல நான் செல்ல – உளமாற
என்னை வாழ்த்திடுவான்
எனக்கு ஊறு ஏதும் ஏற்பட்டால்
அவன் உள்ளத்தினுள் புழுங்கிடுவான்
மாறு கொண்டு நான் சிரித்தால்
மனதால் அவனும் மகிழ்ந்திடுவான்
உடன் பிறவா என் உடன் பிறப்பே!!
உன்னை ஒப்பித்து கவிதை சொல்லும்
என் வரிகளுக்கு வலிமை தர
உவமையினை தேடி நிற்கிறேன்
உன் உறவினில் மூழ்கித்திலைத்திட
என்ன பாக்கியம் நான் செய்தேனோ!?
மறு ஜென்மம் ஒன்றிருந்தால்- உன்
உடன் பிறப்பாய் -நான் பிறக்க வேண்டும்
இல்லையெனில் உன் மடி தவளும்
மகளாக நான் பிறக்க வேண்டும் அண்ணா!!

Comments are closed.