உண்மையான அன்பு கவிதைகள்

கண்களால் பல பேரை
பார்க்க முடிகின்றது.
ஆனால் இதயத்தால்
உன்னை போன்ற சில
அன்பான உறவுகளை
மட்டுமே பார்க்க
முடிகின்றது.

இன்பத்திலும் சரி
துன்பத்திலும் சரி
உன் அன்பை தேடி
என் மனம் தவிக்கும்.

இதயம் துடிப்பது
நின்றால் மட்டும்
மரணம் அல்ல சில
அன்பான இதயங்களின்
பேச்சு நின்றால் கூட
மரணம் தான்.

என் மீது அன்பு
வைப்பதற்கு உன்னை
மிஞ்ச யாரும் இல்லை
அதனால் தான்
என்னவோ என்
இதயம் உன்னை
மட்டும் நேசிக்கிறதோ…?

முகம் பார்க்கமாலும்
குரல் கேக்காமலும்
தொலைவில்
இருந்தாலும் என்
அன்புக்கு
உரிமையான உறவு
நீ மட்டும் தான்.

என் மூச்சோடு
கலந்து விட்ட
உன் காதலின்
சுவாசமும்
என்னோடு
கலந்து விட்ட
உனது அன்பின்
நேசமும் மரணம்
வரை தொடரும்.

ஆழமான காதலும்
உண்மையான
அன்பும் உயிரை
விட புனிதமானது.
உயிர் பிரிந்தாலும்
உண்மையான
அன்பையும் ஆழமான
காதலையும்
பிரிக்க முடியாது.

உண்மையான
அன்பிற்கு
ஏமாற்ற தெரியாது.
அதற்கு ஏமாற
மட்டுமே தெரியும்.

ஒருவரை இழக்கும்
போது வரும்
கண்ணீரை விட
அவர்களின் அன்பை
இழக்க கூடாது என்று
நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு
தான் வலி அதிகம்.

ஒரு பெண்ணோ
ஒரு ஆணோ
திமிராக இருப்பதற்கு
அவர்களின் ஒழுக்கமும்,
நேர்மையும்,
உண்மையான அன்பான
குணங்களுமே காரணம்.

யாருடன் வாழ
முடியுமோ அவர்களை
நேசிப்பதை விட,
யாருடைய அன்பு
இல்லாமல் வாழ
முடியாதோ அவர்களை
நேசியுங்கள் வாழ்கை
சிறப்பாக இருக்கும்.

என் மனம் உன்
அன்பான நினைவுகளை
சுமக்கும் கல்லறை அல்ல.
உன் அன்பான
நினைவுகளை சுமக்கும்
கருவறை.

உருவமற்ற அன்பு
எனும் பொக்கிஷத்திற்காக
மனம் ஏங்கும் ஏக்கம்
தான் இந்த காதல்.

உன் உறவாக மாற
எனக்கு ஆசை இல்லை.
உன் உயிரோடு உயிராக
கலந்து உறவாட ஆசை.

நீ பேசும் வார்த்தையின்
அர்த்தம் எல்லோருக்கும்
புரியும் உன் மௌனத்தின்
அர்த்தம் உன் மீது அன்பு
கொண்டவர்களுக்கும்
உன்னை புரிந்து
வைத்திருப்பவர்களுக்கும்
தான் புரியும்.

வாழ்க்கையில் உண்மையான
அன்பான உறவுகள்
கிடைப்பது முக்கியம்
அல்ல. அந்த உறவுகளுடன்
வாழ் நாள் முழுவதும்
அன்பாக இருப்பதே
முக்கியம்.

வாழ்க்கை எனும்
நீண்ட தூர பயணம்
இலகுவாக இருக்கும்
உண்மையான அன்பு
கொண்டவர்கள் நம்
அருகினில் இருக்கும்
போது.

உன்னை வெறுப்பவர்களை
நினைத்து ஒரு போதும்
கவலை கொள்ளாதே
அவர்களுக்கு உன்
உண்மையான அன்பை
பெரும் தகுதி இல்லை
என்று நினைத்துக் கொள்.

நமக்கு பிடிச்சவர்களிடம்
பேசுவதை விட நம் மீது
உண்மையான அன்பு
கொண்டவர்களிடம்
பேசுங்கள். அது தான்
உங்களுக்கு மன
நிம்மதியை
கொடுக்கும்.

Comments are closed.