கல்லூரி சாலை

மின்சார பூக்களை காண
மின்மினி பூச்சுகள் ஏகபோகமாக படை சூழ
மெர்குரி கண்களை காண துடிக்கும்
மேததகு எதிர்கால இந்தியாக்கள்.
பேருந்து நிலையம் காதல் பூங்காவாக மாறும்
சில மணி நேரங்கள்.
வசந்த காலத்தை விழியோரம் விழாவாக
கொண்டாடும் இளவட்டங்கள்.
பருவ மழையில் தன்னிலை மறந்து நனையும் இளஞ்சிட்டுகள்.
கண்களால் காளையர்களின் உள்ளத்தை களங்கடிக்கும் கல்லூரி கன்னி
மாட புறாக்கள்.
உதட்டோர சிரிப்பை உள்ளங்கையில் தாங்கி பிடிக்க துடிக்கும் கல்லூரி காளைகள்.
பல வண்ண மலர்களை ரீங்காரமிடும் பொன் வண்டுகள்.
காதல் உலகத்தில் கண்களால் காதல் அலைவரிசை ஏற்படுத்தி கொள்ளும்
காதல் மொட்டுகள்.
வாலிபத்தை உச்சம் தொட்ட இளசுகள்,
காதல் பாடத்தை இன்பமாக இளமை சிம்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் திருவிழா என கொண்டாடி தீர்க்கிறது

Comments are closed.